close
Choose your channels
enpt
mraja

'தர்பார்' படத்தின் சூப்பர் அப்டேட்: ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

Wednesday, December 4, 2019 • தமிழ் Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது டப்பிங் உள்பட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

சமீபத்தில் ரஜினியின் டப்பிங் பணிகள் முடிந்த நிலையில் மற்ற நட்சத்திரங்களின் டப்பிங் பணிகள், பின்னணி இசை உள்பட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த படத்தின் புரமோஷன் பணிகள் சமீபத்தில் தொடங்கிய நிலையில் முதல் கட்டமாக இந்த படத்தின் ’சும்மா கிழி’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் அடுத்த கட்டமாக தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இமாதம் 7ஆம்தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை ஜவஹர்லால் நேரு அரங்கில் ’தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பில் இந்த படம் பொங்கல் வெளியீடு என்பதையும் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

Get Breaking News Alerts From IndiaGlitz