close
Choose your channels
Don
Nenjukku Needhi

'புட்டபொம்மா' பாடலை தூக்கி சாப்பிட வருது 'பீஸ்ட்' பாடல்: சொன்னது யார் தெரியுமா?

Thursday, January 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீப காலத்தில் வெளியான சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்று ’புட்டபொம்மா’ என்ற தெலுங்கு பாடல் என்பதும் அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே நடித்திருந்த ’அலா வைகுந்தபுரம்லூ’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் யூ டியூபில் 72 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பாடலை தூக்கி சாப்பிட இரண்டு பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன என ’புட்டபொம்மா’ பாடலுக்கு டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்த ஜானி மாஸ்டர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அவற்றில் ஒன்று தளபதி விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்று உள்ளதாகவும் இன்னொன்று ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகும் படத்தில் இடம்பெற்று உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜானி மாஸ்டரின் இந்த பேட்டியை அடுத்து ’புட்டபொம்மா’ பாடலுக்கு இணையாக அல்லது அதை தூக்கி சாப்பிடும் வகையிலும் ’பீஸ்ட்’ படத்தில் ஒரு பாடல் உள்ளது என்ற தகவல் விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.