close
Choose your channels
Por
Joshwa

'டாடா' இயக்குனரின் அடுத்த படத்தில் இந்த இளம் நடிகரா? தயாரிப்பாளர் யார் தெரியுமா?

Thursday, May 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவின் நடித்த ’டாடா’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகிய நிலையில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வசூலை குவித்தது என்பதும் அதேபோல் ஓடிடியிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’டாடா’ படத்தை இயக்கிய இயக்குனர் கணேஷ் பாபுவின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது. ’டாடா’ இயக்குனர் கணேஷ் பாபு இயக்கும் அடுத்த திரைப்படத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் அதே நேரத்தில் மாரி செல்வராஜ் படத்தில் நடித்து முடித்த பின்னர்தான் துருவ் விக்ரம், ’டாடா’ இயக்குனரின் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. கவினுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் ’டாடா’ என்ற வெற்றி படத்தை கொடுத்த கணேஷ் பாபு, துருவ் விக்ரமுக்கு ஒரு வெற்றி படத்தை கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏற்கனவே கவின் நடிக்க இருக்கும் ஒரு படத்தை டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்க இருப்பதாகவும், இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.