close
Choose your channels

ஓய்வை அறிவித்த தல, சின்னத்தல: சிஎஸ்கே வெளியிட்ட நெகிழ்ச்சியான வீடியோ

Sunday, August 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல தோனி மற்றும் சின்னத்தல ரெய்னா ஆகிய இருவரும் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து ஓய்வு முடிவை அறிவித்ததால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை பார்க்க முடியாத ஏக்கத்தில் ரசிகர்கள் உள்ளனர். நேற்று நாடு முழுவதும் 73வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில் 7ஆம் நம்பர் தோனியும் 3ஆம் நம்பர் ரெய்னாவும் ஓய்வு பெற்றதை நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று தோனி, ரெய்னா ஆகிய இருவரும் ஓய்வு முடிவை அறிவித்த சில நிமிடங்களில் சிஎஸ்கே அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியானது. இதில் தோனி, ரெய்னா ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி கொண்ட நெகிழ்ச்சியான காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

தோனி, ரெய்னா ஆகிய இருவரும் சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றாலும் இருவரும் வரும் ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக தங்கள் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் பட்டையை கிளப்பி வெற்றி கோப்பையை கைப்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.