close
Choose your channels
Viruman
Laal

'வாத்தி கம்மிங்': தல தோனிக்கு சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ

Sunday, September 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது என்பதும் ஆசிரியர்களுக்கு பிரதமர், முதல்வர் முதல் அனைத்து துறையினர்களும் குறிப்பாக திரையுலகினர் பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வாத்தியார் என்று அழைக்கப்படும் தல தோனிக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் என்ற பாடலின் ’பின்னணியில் தல தோனி அடித்த அதிரடி ஷாட்கள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக அவருடைய ஃபேவரேட் ஷாட்டான ஹெலிகாப்டர் ஷாட்டும் இந்த வீடியோவில் உள்ளது.

இந்த வீடியோவுக்கு தல தோனி ரசிகர்கள் மட்டுமின்றி தளபதி விஜய் ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வருவதால் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.