close
Choose your channels
Rocketry
Yaanai

கொரோனா எதிரொலி.. இல்லாத ரசிகர்களுக்கு தனியாய் கையசைத்த ரொனால்டோ...! நெகிழ்ச்சி வீடியோ.

Monday, March 9, 2020 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா எதிரொலி.. இல்லாத ரசிகர்களுக்கு தனியாய் கையசைத்த ரொனால்டோ...! நெகிழ்ச்சி வீடியோ.இத்தாலியின் ஆலியன்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த கால்பந்தாட்டத்தில் கோரோனா வைரஸ் காரணமாக ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. யாருமே வரவில்லை என்றாலும் கிரிஷ்டியானோ ரொனால்டோ தான் ரசிகர்கள் இருக்கும் பொது வழக்கமாக செய்யும் கையசைப்புக்களை தனியாக செய்து கொண்டிருந்தார். இது பார்ப்பவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.    

ஜூவான்டஸுக்கும் இன்டெர்மிலனுக்கும் இடையே நேற்று இத்தாலியின் ஆலியன்ஸ் மைதானத்தில் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது பரவி வருகிறது. இத்தாலியிலும் இதன் பாதிப்பு மிக மோசமாக உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலகில் எங்குமே மக்கள் கூட்டமாக கூட வேண்டாம் என உலக சுகாதார நிறுவனத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.    

இதனால் பல நாடுகளில் விளையாட்டுப் போட்டிகள், விழாக்கள், நிகழ்ச்சிகள் போன்றவை ஒத்திவைக்கபப்ட்டன. இத்தாலியில் நேற்று நடந்த போட்டியில் ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் கால்பந்தாட்டம் ஒளிபரப்பப்பட்டது. இதனால் ரசிகர்கள் மைதானத்திற்கு வரவில்லையென்றாலும் வீடுகளில் இருந்து கண்டுகளித்தனர். 

ஆனால் ஜுவான்டஸுக்காக ஆடிய கிரிஷ்டியானோ ரொனால்டடோ மைதானத்திற்குள் வரும் போதும் விளையாடும் போதும் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்த அவர் மறக்கவில்லை. அவர் எப்போதும் வாகனத்தில் இருந்து இறங்கி மைதானத்திற்குள் நுழையும் போது ரசிகர்களின் கைகளை தட்டிக்கொண்டே செல்வது வழக்கம். நேற்று யாருமே வரவில்லை என்றாலும் ரசிகர்கள் இருப்பது போல கைகளை தட்டிக் கொண்டே சென்றார். அதே போல விளையாடும் பொது மைதானத்த்திலும் இல்லாத தனது ரசிகர்களை பார்த்து கையசைப்பதை அவர் மாற்றவில்லை. இந்த வீடியோவானது அவரது ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நேற்று  நடந்த போட்டியில் ஜுவான்டஸ் அணி வெற்றி பெற்றது. ஆரோன் ராம்சேவும், பாலோ டைபாலாவும் தலா ஒரு கோல் அடித்தனர். 

 

                     

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.