close
Choose your channels
Rocketry
Yaanai

குக் வித் கோமாளி ஸ்ருதிகா மகனை பார்த்ததுண்டா? இதோ அசத்தல் புகைப்படம்!

Wednesday, May 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஸ்ருதிகாவின் மகன் புகைப்படம் இணையதளங்களில் பரவி வருகிறது.

விஜய் டிவியில் ஆரம்பத்திலிருந்தே பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒன்று தான் என்று கூறலாம். குறிப்பாக இரண்டாவது சீசன் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் தற்போது 3வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த சீசனின் போட்டியாளர்களில் ஒருவர் ஸ்ருதிகா என்பது தெரிந்ததே. பிரபல நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசன் பேத்தியான இவர் சூர்யா நடித்த ’ஸ்ரீ’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்பவர்களில் ஒருவர் சுருதிகா என்பதும் சில சமயம் இவர் குக்கா? அல்லது கோமாளியா? என்று சந்தேகம் வரும் அளவுக்கு அப்பாவியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருப்பார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஸ்ருதிகா தனது மகனுடன் ஆட்டோவில் சென்று ஷாப்பிங் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். முதன்முதலாக ஸ்ருதிகாவின் மகனை பார்க்கும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.