close
Choose your channels
Viruman
Laal

ஊசிய பாத்து குத்துங்க, செல்லக்குட்டிக்கு வலிக்கும்: தடுப்பூசி போட்டு கொண்ட ஷிவாங்கி 

Thursday, June 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் தடுப்பூசி கண்டிப்பாக போட வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. தடுப்பூசி போடுவது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காக திரையுலக பிரபலங்கள் பலரும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பதும் அதுமட்டுமின்றி தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பலர் தங்களுடைய டுவிட்டர் பக்கங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ஷிவாங்கி தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இதில் அவர் பதிவு செய்துள்ள மூன்று புகைப்படங்களில் ஒன்றில் அவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் போது கண்ணை மூடியவாறு உள்ளது.

இந்த புகைப்படம் பதிவு செய்து இரண்டு மணி நேரமே ஆன நிலையில் சுமார் 4 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர் என்பதும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கமெண்ட் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான கமெண்ட்ஸ்களில் ’ஊசிய பாத்து குத்துங்க, செல்லக்குட்டிக்கு வலிக்கும்’ என்றும், செல்லமா போல்டு என்றும் செல்லம்மா ஸ்ட்ராங்’ என்றும் பதிவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.