close
Choose your channels
aranmanai

திருமண வரவேற்பின்போது புகழை விரட்டி விரட்டி அடித்த ரித்திகா: வைரல் வீடியோ

Tuesday, November 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'குக் வித் கோமாளி’ போட்டியாளர் ரித்திகா திருமண வரவேற்பு சமீபத்தில் நடந்த நிலையில் அதில் ரித்திகா புகழை விரட்டி விரட்டி அடித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரித்திகா, பாலா, புகழ் உள்ளிட்டோர் நெருக்கமானார்கள் என்பது தெரிந்ததே. மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மட்டுமின்றி விஜய் டிவியின் வேறு சில நிகழ்ச்சிகளிலும் பாலா - ரித்திகா ஆகிய இருவருக்கும் காதல் இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் வினு என்பவரை ரித்திகா காதலித்து வந்த நிலையில் இரு தரப்பு பெற்றோர்களின் சம்மதத்துடன் சமீபத்தில் திருமணம் நடந்தது. கேரளாவில் இந்த திருமணம் நடைபெற்றதை அடுத்து சமீபத்தில் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் விஜய் டிவி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் பாலா தனது வாழ்த்தை மணமக்களுக்கு தெரிவித்து கொண்டிருக்கும்போது அப்போது வந்த அங்கு வந்த புகழ், பாலாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதனால் செல்லக் கோபமடைந்த ரித்திகா, புகழை விரட்டி விரட்டி அடித்த காமெடி வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்பிறகு பாலாவிடம் ரித்திகா சாப்பிட்டுவிட்டு தான் செல்ல வேண்டும் என்றும் அன்புடன் கூறிய காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment