close
Choose your channels
aranmanai

'குக் வித் கோமாளி' ரவீனாவின் காதலர் ஒரு டான்ஸ் மாஸ்டரா? க்யூட் புகைப்படங்கள்..!

Saturday, June 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த தொலைக்காட்சி சீரியல் நடிகை ரவீனா, டான்ஸ் மாஸ்டர் ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி, அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் இருவரும் காதலர்களா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்

விஜய் நடித்த ’ஜில்லா’ கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’ விஷ்ணு விஷால் நடித்த ;ராட்சசன்; உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ரவீனா. அதன் பிறகு அவர் ’பூவே பூச்சூடவா’ ‘மௌன ராகம் 2’ உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார் என்பதும் இந்த தொடர்களில் அவரது கேரக்டருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ’குக் வித் கோமாளி சீசன் 4’ நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக கலந்து கொண்டிருக்கிறார் என்பதும் அவருக்கு மிகப்பெரிய ரசிகர்களின் ஆதரவு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரவீனா, டான்ஸ் மாஸ்டர் மணியுடன் இணைந்திருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இருவரும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் ஈடுபட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் கூட வைரல் ஆகி வருகின்றன.

இந்த நிலையில் மணி, ரவீனா இருவரும் காதலிக்கிறார்களா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பிய நிலையில் ரவீனா மற்றும் டான்ஸ் மாஸ்டர் மணி ஆகிய இருவரும் தங்கள் காதல் பற்றி இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment