close
Choose your channels
Viruman
Laal

இவர் தான் 'குக் வித் கோமாளி' புகழ் காதலியா?

Wednesday, January 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்களில் ஒருவர் கோமாளியாக நடித்த புகழ் என்பதும் இவர் தற்போது அஜித் நடித்து முடித்துள்ள ’வலிமை’ உள்பட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி உள்பட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது பெண்களிடம் புகழ் சகஜமாக பழகுவார் என்பதும், அதேபோல் புகழ் தனது சமூக வலைதளத்தில் பல பெண்களுடன் இருந்த புகைப்படங்களையும் பதிவு செய்து இருப்பார் என்பதும் தெரிந்ததே.

ஆனால் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் ஒரு இளம்பெண்ணுடன் அவர் இருப்பது போன்று உள்ளது. அதில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பார்ட்னர் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் புகழின் காதலியா? வருங்கால மனைவியா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர். இந்த பெண்ணும் விஜய் டிவியில் தான் பணிபுரிகிறார் என தெரிகிறது.

எனவே புகழும், இந்த பெண்ணும் காதலிக்கின்றார்களா? விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.