close
Choose your channels
NMM
NMM

பட்டுக்குட்டி, செல்லக்குட்டி: 'குக் வித் கோமாளி' புகழ் கூறிய பிறந்த நாள் வாழ்த்து யாருக்கு தெரியுமா?

Tuesday, May 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமானது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ’குக்’கள், கோமாளிகள், ஆங்கர், நடுவர்கள் உள்பட அனைவருமே பிரபலமானார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை நினைத்தால் உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது புகழ் மற்றும் ஷிவாங்கி தான் என்பதும், ’பாசமலர்’ சிவாஜி கணேசன் சாவித்திரி அண்ணன் தங்கை பாசத்திற்கு இணையாக இவர்களது பாசப்பிணைப்பு மற்றும் அவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் சேட்டைகள் பார்த்து சிரிக்காதவர்களே இருக்க மாட்டார்கள் என்பது இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்தவர்களுக்கு தெரியும்.

இந்த நிலையில் குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுவதை அடுத்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கை ஷிவாங்கிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: பிறந்தநாள் வாழ்த்துக்கள் மை டியர் செல்லக்குட்டி, தங்கமே! உன்னை நான் மிஸ் பண்ணுகிறேன், பட்டுக்குட்டி எப்பவும் நீ மகிழ்ச்சியாக இருக்கணும், கடைசிவரைக்கும் அண்ணா உன் கூடவே இருப்பேன்’ என்று தெரிவித்துள்ளார். புகழின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.