close
Choose your channels
Viruman
Laal

எப்படிப்பா மனசு வருது உங்களுக்கு? ரசிகர்களிடம் கடிந்து கொண்ட 'குக் வித் கோமாளி' புகழ்!

Sunday, April 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தன்னுடன் செல்பி எடுக்க முயற்சித்த ரசிகர்களை ’எப்படிப்பா உங்களுக்கு மனசு வருது’ என கடிந்து கொண்ட குக் வித் கோமாளி புகழால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் காலமானதை அடுத்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவருக்கு நேரில் அஞ்சலி தெரிவித்தனர். அந்த வகையில் குக் வித் கோமாளி புகழ் நேற்று நேரில் சென்று விவேக் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் மீண்டும் திரும்பி வந்தபோது ரசிகர்கள் பலர் குவிந்து புகழுடன் புகைப்படம் எடுக்கவும் செல்பி எடுக்கும் முயற்சி செய்ததால் பரபரப்ப்பு ஏற்பட்டது. அப்போது ’நான் டெத்துக்கு வந்து இருக்கிறேன், இங்கே எப்படிப்பா உங்களுக்கெல்லாம் போட்டோ எடுக்க மனசு வருது’ என்று ரசிகர்களை கடிந்து கொண்டார். அதன் பிறகு காவலர் ஒருவர் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சமீபத்தில்தான் புகழ் திறந்துவைத்த கடை ஒன்றில் அதிக கூட்டம் கூடியதை அடுத்து அந்த கடை சீல் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.