close
Choose your channels
Viruman
Laal

ஹீரோவானார் 'குக் வித் கோமாளி' புகழ்: ஹீரோயின் இவரா?

Sunday, March 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் கடந்த மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தற்போது திரையுலகில் நடித்து வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது காமெடியால் கலக்கி வந்த புகழ் ஏற்கனவே ஒரு சில படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து வரும் நிலையில், தற்போது அவர் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

குக் வித் கோமாளி புகழ் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு ’மிஸ்டர் ஜூ கீப்பர்’ (Mr Zoo Keeper) என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் 20 முதல் ஊட்டியில் நடைபெற இருப்பதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற இருப்பதாகவும் புகழ் இன்று ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் புக்ழ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் ஒரிஜினல் புலியுடன் தான் நடிக்க இருப்பதாகவும் இதற்காக தனக்கு பயிற்சி அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நாயகியாக சந்தானம் நடித்த ’டிக்கிலோனா’ படத்தில் நடித்தவர் ஷெரின் காஞ்ச்வாலா நடிக்க இருப்பதாகவும் ’ஷமிதாப்’ உள்பட பல வெற்றிப் படங்களில் ஒளிப்பதிவு செய்த தன்வீர் ஒளிப்பதிவில் உருவாகவுள்ள இந்த படத்தை மாதவன் நடித்த ’என்னவளே’ திரைப்படத்தை இயக்கிய ஜெ.சுரேஷ் என்பவர் இயக்க உள்ளார். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் என்று குறிப்பிட்டத்தக்கது.

’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ், காமெடி நடிகராக நடித்து வரும் நிலையில் தற்போது ஹீரோவாகவும் நடிக்க உள்ளதை அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் குழுவினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.