close
Choose your channels

'குக் வித் கோமாளி' மணிமேகலைக்கு என்ன ஆச்சு? வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

Thursday, March 11, 2021 • தமிழ் Comments

’குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர்களில் ஒருவர் மணிமேகலை என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மணிமேகலை இரண்டு வாரங்கள் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள நிகழ்ச்சிகளில் ஒன்று ’குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் குக்’களும் கோமாளிகளும் செய்யும் அட்ராசிட்டிகளும், நகைச்சுவையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளதால் இந்த நிகழ்ச்சி நம்பர் ஒன் இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் நான்ஸ்டாப் காமெடி செய்பவர்களில் ஒருவர் மணிமேகலை. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு ஒரு சிறு விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் இரண்டு வாரங்கள் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மிஸ் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்

மேலும் அவர் ’ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை இல்லை, ஆஸ்பத்திரிக்கு போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை என்று சமீபத்தில் படித்தேன், நல்லா இருந்தது என்றும், எனக்கு ஒரு சின்ன விபத்து ஏற்பட்டுள்ளது ஆனாலும் நலமாக இருக்கின்றேன் என்றும் இரண்டு வாரத்தில் மீண்டும் உங்களை சந்திப்பேன் என்றும் தெரிவித்துள்ளேன். மேலும் மணிமேகலை தனது இன்ஸ்டாவில் ‘முக்கியமா சுடு தண்ணி தூக்கும்போது பாத்து’ என்று குறிப்பிட்டிருப்பதால் அவர் சுடுதண்ணியால் காயம் அடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது

Get Breaking News Alerts From IndiaGlitz