close
Choose your channels
Viruman
Laal

பிக்பாஸ் சீசன் 6: 'குக் வித் கோமாளி' பிரபலம் ஒரு போட்டியாளரா?

Monday, July 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் குக் வித் கோமாளி’ மற்றும் பிக்பாஸ் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் பிரபலம் ஒருவர் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்களாக வெற்றிகரமாக நடந்த நிலையில் விரைவில் 6வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதால் இந்த நிகழ்ச்சி முடிவடைந்த உடன் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு போட்டியாளர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. ஏற்கனவே இசையமைப்பாளர் டி இமான் அவர்களில் முன்னாள் மனைவி பிக்பாஸ் போட்டியாளராக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3 சீசன்களையும் தொகுத்து வழங்கிய ரக்சன் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.