close
Choose your channels

சினிமாவில் ஹீரோவாகும் 'குக் வித் கோமாளி' பிரபலம்.. சின்னத்திரை குயின் தான் நாயகி..!

Thursday, May 30, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சின்னத்திரையில் பிரபலமாகி அந்த பிரபலத்தின் மூலம் வெள்ளி திரையில் நட்சத்திரங்களாக அறிமுகம் ஆகும் பலர் இதுவரை இருந்துள்ளனர் என்பதை ஏற்கனவே பார்க்கிறோம். பிரியா பவானி சங்கர், வாணி போஜன் உட்பட சில நடிகைகள் சின்னத்திரையிலிருந்து வந்து தற்போது பெரிய திரையில் பிஸியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் 'குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவரும் அஜித்தின் ’வலிமை’ படத்தில் நடித்தவருமான ராஜ் அய்யப்பா கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் சின்னத்திரையின் குயின் என்று அழைக்கப்பட்ட நடிகை டெல்னா டேவிஸ் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகை டெல்னா டேவிஸ் ஏற்கனவே ’விடியும் வரை பேசு’ ’49 ஓ’ ’குரங்கு பொம்மை’ உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் இந்த படத்தில் தான் அவர் நாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் ’ரோஜா’ என்ற சீரியலில் அறிமுகம் ஆகி அதன் பிறகு ’அன்பே வா’ ’அபியும் நானும்’ ’கண்ணான கண்ணே’ ’இலக்கியா’ ’தாமரை’ போன்ற சீரியல்களில் நடித்தார் என்பதும் சில சன் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
Login to post comment
Cancel
Comment