close
Choose your channels
siren
lal_salaam

நான் டைவர்ஸ் செய்யப்போறேன்.. குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் ஸ்ருதிகாவின் வீடியோ

Friday, December 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்ருதிகா டைட்டில் வின்னர் பட்டம் பெற்றார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் பரத் உடனான நட்பை டைவர்ஸ் செய்யப் போகிறேன் என்று காமெடியாக கூறிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஸ்ருதிகா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியை கலகலப்பாக மாற்றினார் என்பது தெரிந்ததே. மேலும் அவர் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றபோது துள்ளி குதித்தார் என்றும் அந்த காட்சிகள் இன்னும் பார்வையாளர்களின் மனதில் பதிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது வீட்டிற்கு கோமாளிகளில் ஒருவரான பரத் உள்பட தனது நண்பர்களை அழைத்து ஸ்ருதிகா விருந்து கொடுத்துள்ளார். அப்போது திரையில் ஸ்ருதிகா சூர்யாவுடன் நடித்த ’ஸ்ரீ’ என்ற திரைப்படம் ஓடிய போது அவர் மிகவும் வெட்கப்பட்டார்.

இந்த படத்தை தயவு செய்து யாரும் பார்க்காதீர்கள், இந்த படத்தை பார்த்தால் எனக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த ரசிகர்கள் எல்லாம் போய்விடுவார்கள் என்று கூறினார். அப்போது பரத் வேண்டுமென்றே ’இது என்ன சீன், எதற்காக படுத்து இருக்கிறீர்கள்? எதற்காக சூர்யாவை கட்டிப்பிடிக்கிறீர்கள் என்றெல்லாம் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தபோது ஒரு கட்டத்தில் கடுப்பான ஸ்ருதிகா, ‘ நான் பரத்துடன் உள்ள நட்பை டைவர்ஸ் செய்யப் போகிறேன் என காமெடியாக கூறியுள்ளார். இதுகுறித்த வீடியோ ஸ்ருதிகாவின் இன்ஸ்டாவில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.