close
Choose your channels
Don
Nenjukku Needhi

உங்களால் அதை ஒருபோதும் பார்க்க முடியாது: 'குக் வித் கோமாளி' தர்ஷா குப்தா

Friday, March 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு வெற்றிகரமான மனிதரை பார்க்கும்போது அவருக்கு வெளிப்படையில் கிடைத்துள்ள புகழை மட்டுமே உங்களால் பார்க்க முடியும். ஆனால் அந்த புகழையும் பெயரையும் அடைய அவர் செய்த தனிப்பட்ட தியாகங்களை உங்களால் ஒருபோதும் பார்க்க முடியாது என ’குக் வித் கோமாளி தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவரும் நிலையில் அந்த நிகழ்ச்சியில் ‘குக்’களில் ஒருவராக கலந்து கொண்டவர் தர்ஷா குப்தா என்பதும் அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எலிமினேட் செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டாலும் விரைவில் அவர் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக மீண்டும் வருவார் என்பதும் அவருக்கு இறுதிப்போட்டிக்கு செல்லவும் டைட்டில் வின்னராகவும் ஒரு வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மீண்டும் தர்ஷா குப்தா இந்த நிகழ்ச்ச்யில் எண்ட்ரியானால் கோமாளி புகழுக்கு உற்சாகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் தர்ஷாகுப்தா சற்று முன்னர் ஒரு பொன்மொழியை உதிர்த்து ஒரு அட்டகாசமான புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்: அந்த பொன்மொழி தான் இது: ஒரு வெற்றிகரமான மனிதரை பார்க்கும்போது அவருக்கு வெளிப்படையில் கிடைத்துள்ள புகழை மட்டுமே உங்களால் பார்க்க முடியும். ஆனால் அந்த புகழையும் பெயரையும் அடைய அவர் செய்த தனிப்பட்ட தியாகங்களை உங்களால் ஒருபோதும் பார்க்க முடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.