'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம்?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் முதல் பாகம் ஓரளவுக்கு வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் இரண்டாவது பாகம் மிகப்பெரிய வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமானோர் அடிமையாகி விட்டார்கள் என்றே சொல்லலாம். அதற்கு முழு காரணம் குக்’களும், கோமாளிகளும் செய்யும் சமையலை விட அவர்கள் செய்யும் நகைச்சுவையும் சேட்டைகளும் காரணம்.
இந்த நிலையில் குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் என்பது குறித்த தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. அதன்படி ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அதிகபட்சமாக சம்பளம் வாங்குபவர் ஷகிலா என்றும் அவர் ஒரு எபிசோடுக்கு ரூபாய் 50,000 வாங்குவதாக கூறப்படுகிறது.
மேலும் பாபா பாஸ்கர் மற்றும் மதுரை முத்து ஆகியோர் ஒரு எபிசோடுக்கு 40,000 ரூபாயும், அஸ்வின் 25 ஆயிரமும், தர்ஷா மற்றும் பவித்ரா ஒரு எபிசோடுக்கு பத்தாயிரம் வாங்குவதாக தெரிகிறது
கோமாளிகளை பொறுத்தவரை மணிமேகலை, சுனிதா மற்றும் ஷிவாங்கி ஆகியோர்கள் ரூ.20,000 ஒரு எபிசோடுக்கு சம்பளம் வாங்குவதாகவும் பாலா மற்றும் புகழ் ஒரு எபிசோடுக்கு ரூ.15 ஆயிரம் வாங்குவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதுமட்டுமின்றி ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குக் மற்றும் கோமாளிகளாக இடம் பெற்றவர்களில் ஒருசிலர் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர் என்பதால் இவர்களின் சம்பளம் லட்சத்தில் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.