close
Choose your channels
IKK

யோகிபாபு-ஓவியா படத்தின் டைட்டில் அறிவிப்பு!

Thursday, September 23, 2021 • தமிழ் Comments

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபுவுடன் பிரபல நடிகை ஓவியா இணைந்து ஒரு படத்தை திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் பநிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமான ஓவியா, முதன்முதலாக யோகிபாபு உடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளி வந்தது என்பதும் இந்த படத்தின் பூஜை நாளை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு ’கான்ட்ராக்டர் நேசமணி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஸ்வதீஷ் என்பவர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு தர்மபிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz