close
Choose your channels

சினிமாவிற்கு வருவதற்கு முன் 1983ல் எடுத்த விவேக்கின் புகைப்படம் வைரல்!

Saturday, April 17, 2021 • தமிழ் Comments

காமெடி நடிகர் விவேக் நேற்று மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தமிழ் திரையுலகிற்கு மட்டுமின்றி தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும். அவருக்கு திரையுலகினர் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

இந்த நிலையில் விவேக்கின் பழைய புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. விவேக் சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதற்கு முன்னர் மதுரையில் அவர் டெலிபோன் ஆப்பரேட்டர் பயிற்சி வகுப்பில் படித்துக்கொண்டிருந்த நிலையில் பயிற்சி முடித்தவுடன் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளிவந்துள்ள்து.

கடந்த 1983 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் இருக்கும் விவேக்கின் தோற்றம் அவர் அறிமுகமான ’மனதில் உறுதி வேண்டும்’ திரைப்படத்தில் இருப்பது போலவே உள்ளது. இந்த புகைப்படத்தை திரையுலக ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்
 

Get Breaking News Alerts From IndiaGlitz