close
Choose your channels
Don
Nenjukku Needhi

ரஜினி மகளுக்கு ஆதரவு அளித்த முதல்வர் ஸ்டாலின்!

Wednesday, November 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஹூட் என்ற செயலியை அறிமுகம் செய்து வைத்தார் என்பதும் சமூக வலைதளமான இந்த செயலியில் குரல் பதிவின் மூலம் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த செயலியில் ஏராளமானோர் கணக்குகளை தொடங்கி வந்தார்கள் என்பதும் திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்களும் இந்த செயலியை பயன்படுத்தியதாக தகவல்கள் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஹூட் செயலியில் இணைந்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவரை வரவேற்கும் விதமாக டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:

மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார் அவர்களை ஹுட் சமூக ஊடகத்திற்கு வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இன்று முதல் @cmotamilnadu என்கிற அதிகாரப்பூர்வமான ஹூட் ஹேண்டிலை அனைவரும் பின்தொடரலாம்’ என பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.