சொந்த அண்ணனையே ஒதுக்கியவர் மு.க.ஸ்டாலின்… திருச்சி கூட்டத்தில் தமிழக முதல்வர் காட்டம்!


Send us your feedback to audioarticles@vaarta.com


வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று தேசியக் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதை அடுத்து தொடர்ந்து தற்போது திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது திருச்சியில் தொடர்ந்து இரண்டாவது நாளாகத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை பாம்பு மற்றும் பல்லி போன்ற விஷம் கொண்டவர் என விமர்சிக்கிறார். உண்மையில் நான் மனிதன். அரசியல் வாழ்க்கைக்கு அண்ணனே (மு.க.அழகிரி) போட்டியாக வருவார் என நினைத்த மு.க.ஸ்டாலின் அவருடன் இதுவரை சமரசம் செய்து கொள்ளாமல் தவிர்த்து வருகிறார்.
இத்தகைய குணங்களைக் கொண்ட மு.க.ஸ்டாலினா தமிழக மக்களுக்காக உழைக்கப் போகிறார். அவருடைய செயல்கள் அனைத்தும் கடும் விமர்சனத்தைக் கொண்டதாகவே இருக்கிறது என கடும் ஆவேசத்துடன் மக்கள் முன்னிலையில் பேசியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையே திமுக, அதிமுக என இரு கட்சிகளும் தொடர்ந்து விமர்சனத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது மு.க.ஸ்டாலின் தனது அண்ணனுடன் சமரசம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என தமிழக முதல்வர் விமர்சித்து இருப்பதும் பொதுமக்களிடம் கவனம் பெற்று இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.