close
Choose your channels
DJ
DJ

விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய திரையுலக பிரபலங்கள்: புகைப்படங்கள், வீடியோக்கள் வைரல்

Thursday, September 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது என்பதும், மக்கள் விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தும், வீட்டில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்த புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ள நிலையில் அவை வைரல் ஆகி வருகின்றன.

நடிகர் பரத் தமது வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். மேலும் அவர் ’அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் மக்களே’ என்றும் பதிவு செய்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த மாளவிகா மேனன் தனது சமூக வலைத்தளத்தில் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள் என்று கூறி தனது வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

அதேபோல் பாலிவுட் பிரபல நடிகர் சோனு சூட் தனது வீட்டில் விநாயகருக்கு அலங்காரம் செய்து குடும்பத்தினருடன் குடும்பத்தினருடன் கொண்டாடி புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான நடிகை ஷெரீன் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் என்று கூறி ’கொழுக்கட்டை சாப்பிட்டீர்களா? என்று தனது இன்ஸ்டாகிராமில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல் இன்னொரு பிக்பாஸ் பிரபலமான அக்சரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.


பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சாரா அலி கான் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் என்று கூறி பிரம்மாண்டமான விநாயகர் புகைப்படத்தைப் செய்துள்ளார்.

நடிகை கஸ்தூரி தனது வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய புகைப்படத்தை பதிவு செய்து, ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதூர்த்தி கொண்டாடுவதில் மகிழ்ச்சி என்றும், இந்த ஆண்டு 6 மணி நேரம் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேலை செய்தேன் என்றும் ஒரு மணிநேரம் பூஜை செய்தேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் நடிகை நீதுசந்திரா துபாயில் உள்ள தனது வீட்டில் விநாயகர் சிலையை கொண்டாடியுள்ளார். மேலும் நேற்று அவர் விநாயகர் சதுர்த்தி தினத்தில் விரதம் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான் கான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய போது எடுக்கப்பட்ட வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் தெலுங்கு இந்தி படங்களில் நடித்தவர் நடிகை ரவீனா டாண்டன் தனது குடும்பத்தினரிடம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.