close
Choose your channels

சிரஞ்சீவியிடம் வாழ்த்து பெற்ற ஜிவி பிரகாஷ்: வைரல் வீடியோ

Saturday, April 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்க்கு தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் ஹீரோ மற்றும் இசையமைப்பாளர் என இரண்டு அவதாரங்களிலும் வெற்றிகரமாக பயணம் செய்து வருபவர் ஜிவி பிரகாஷ் என்பதும் அவரது நடிப்பில் நேற்று வெளியான 'செல்பி’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் உருவாக உள்ள திரைப்படத்திற்கு இசை அமைக்க ஜிவி பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். டைகர் நாகேஸ்வர ராவ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு வருகை தந்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ஜிவி பிரகாஷ் உள்பட படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இது குறித்த வீடியோவை ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து சிரஞ்சீவிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

பிரபல தெலுக்கு நடிகர் ரவி தேஜா, காயத்ரி பரத்வாஜ் நடிப்பில் உருவாகும் இந்த படத்தை ‘தளபதி 66’ படத்தின் இயக்குனர் வம்சி இயக்க உள்ளார் என்பதும் அபிஷேக் அகர்வால் என்பவர் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.