close
Choose your channels
Anbirkiniyaal

அவெஞ்சர்ஸ் படம் பார்த்ததால் உயிருக்கு போராடிய இளம்பெண்

Saturday, April 27, 2019 • தமிழ் Comments

ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் படமான 'அவெஞ்சர்ஸ் தி எண்ட் கேம்' திரைப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் சாதனை செய்து வருகிறது. தமிழகத்தில் ரஜினியின் 'பேட்ட' மற்றும் அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய படங்களின் ஓப்பனிங் வசூல் சாதனையை இந்த படம் முறியடித்துவிட்டது.

இந்த நிலையில் 'அவெஞ்சர்ஸ் சீரிஸில் இந்த படம் கடைசி படம் என்பதால் இறுதியில் இந்த படத்தில் உள்ள இரண்டு முக்கிய கேரக்டர்கள் இறந்து போய்விடுகின்றனர். இதனை பார்த்த பல அவெஞ்சர்ஸ் ரசிகர்கள் வருத்தம் அடைந்தது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த சீனாவின் இளம்பெண் ஒருவர், அந்த இரண்டு கேரக்டர்கள் இறந்து போனதை தாங்க முடியாமல் தேம்பி தேம்பி அழுதுள்ளார்.

தொடர்ச்சியாக அழுததால் ஒரு கட்டத்தில் அவரால் மூச்சுவிட முடியாமல் போய்விட்டது. இதனையடுத்து அவரது தோழி அந்த இளம்பெண்ணை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அந்த இளம்பெண்ணுக்கு மருத்துவர்கள் உடனடியாக ஆக்சிஜன் கொடுத்து உயிரை காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவம் சீனாவின் சமூக வலைத்தளத்தில் வைரலாகியதுடன், இந்த படத்திற்கு பெரும் புரமோஷனாகவும் அமைந்துள்ளது.

Get Breaking News Alerts From IndiaGlitz