close
Choose your channels

மாற்றுத் திறனாளிகளுக்கான டி20 போட்டியில் தமிழக வீரர்கள் வெற்றி… வாழ்த்தி மகிழும் நடிகர் கமல்ஹாசன்!

Friday, April 16, 2021 • தமிழ் Comments

மாற்றுத் திறனாளிகளுக்கான டி20 கிரிக்கெட் போட்டி சமீபத்தில் துபாயில் நடைபெற்று முடிந்தது. இந்தப் போட்டியில் வெற்றிக் கோப்பையைச் சூடிக்கொண்டு தயாகம் திரும்பி இருக்கும் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி வீரர்களுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்துத் தெரிவித்து உள்ளார்.

மேலும் தாயகம் திரும்பிய சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் கிரிக்கெட் வீரர்களைச் சந்தித்து அவர்களுடன் புகைப்படத்தையும் கமல்ஹாசன் எடுத்துக் கொண்டு உள்ளார். அந்தப் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ள அவர், “துபாயில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியினருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்” எனப் பதிவிட்டு உள்ளார்.

நடைபெற்று முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்காக நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சி, நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி இரண்டுடனும் கூட்டணி வைத்து போட்டியிட்டது. மேலும் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை எதிர்த்துப் போட்டியிட்டு இருக்கும் நடிகர் கமல்ஹாசனின் தேர்தல் முடிவை அவருடைய கட்சியினர் மட்டுமல்லாது ரசிகர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியினர் டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றிப் பெற்று தயாகம் திரும்பியுள்ளனர். அவர்களை வரவேற்ற நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து உள்ளார்.

Get Breaking News Alerts From IndiaGlitz