close
Choose your channels

'இந்தியன் 2' விபத்தில் கார்ட்டூனிஸ்ட் மதன் மருமகன் பலி: அதிர்ச்சி தகவல்

Thursday, February 20, 2020 • தமிழ் Comments

கமலஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் நேற்று சென்னை அருகே உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென கிரேன் ஒன்று விழுந்தது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் பலியாகியதாகவும் 10 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த விபத்தால் ஷங்கர், கமல்ஹாசன் உள்பட படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இந்த நிலையில் ’இந்தியன் 2’ விபத்தில் பலியானவர்களில் ஒருவர் பிரபல கார்ட்டூனிஸ்ட் மதன் அவர்களின் மாப்பிள்ளை கிருஷ்ணாவும் ஒருவர் என்பதும், ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர் மதனின் இளைய மகள் அமிர்தா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. 

Get Breaking News Alerts From IndiaGlitz