புரமோ வீடியோ இல்லை.. தமிழ் சினிமாவில் இது முற்றிலும் புதுமை.. 'ரெட்ரோ' படக்குழுவின் அறிவிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஒரு திரைப்படத்தின் புரமோஷன் என்றாலே, அந்த படத்தின் ஸ்டில்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது தான் என்ற நிலையில், சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ படத்தின் புரமோஷன் வித்தியாசமாக, தனித்துவமாக செய்யப்பட்டுள்ளது.
சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘ரெட்ரோ’. இந்த படம் கேங்ஸ்டர் மற்றும் ரொமான்ஸ் பின்னணியை கொண்டு உருவாகியுள்ளது.
சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருப்பதாக கூறப்படும் இந்த படத்தில், பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருக்கிறார். மேலும், ஜெயராம், கருணாகரன், ஜோஜூ ஜார்ஜ் உள்பட பலர் நடித்துள்ள நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே, இந்த படம் மே 1 ஆம் தேதி, தொழிலாளர் தினத்தில் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் புரமோஷன்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமாக, இந்த படத்தின் ஸ்டில்கள் கார்ட்டூன் வடிவில் உருவாகியுள்ளது. அதில், சூர்யா பேசும் வசனங்கள், கார்ட்டூனாக வரையப்பட்டு, வசனமாகவும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.
இது குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட பதிவில், "இந்த படத்தின் அறிவிப்பை வெளியிட்ட போது, சந்தோஷ் நாராயணன் பிசியாக இருந்தார். ஆனாலும், எங்களுக்காக நேரம் ஒதுக்கி, தீம் மியூசிக் 5 மணி நேரத்திற்குள் தயார் செய்து கொடுத்தார். அதேபோல், அந்தமானில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் போது, வானிலை சரியாக ஒத்துழைக்கவில்லை. மழை பெய்து கொண்டே இருந்தது. ஆனாலும், எங்கள் படக்குழு பின்வாங்கவில்லை. சூர்யாவும் ஒரே ஷாட்டில் சில காட்சிகளை நடித்து முடித்து, அசத்தினார்!" என்று பதிவு செய்துள்ளது.
காமிக்ஸ் வடிவில், வித்தியாசமாக இந்த படத்தின் புரமோஷன் செய்யப்பட்டு உள்ளதை , ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
🎬 Kicking Off "#Retro" in Style with the #RetroBTSComic!
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) February 10, 2025
Forget the usual pooja ceremony or predictable promo videos—Karthik Subbaraj wanted something totally unique. So, the team went all out and shot a single, high-impact scene to announce Retro. No fluff, just pure cinematic… pic.twitter.com/v4capJUfQf
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com