close
Choose your channels

உலகின் மிக உயரமான சாலை… கின்னஸ் சாதனை படைத்த இந்திய ஊர்!

Wednesday, November 17, 2021 • தமிழ் Comments

உலகின் மிக உயர்ந்த வாகனப் போக்குவரத்து சாலை என்ற அடிப்படையில் “லடாக் சாலை“ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து இருக்கிறது. இதற்கு முன்பு பொலிவியா அந்த பெருமையை தக்கவைத்துக் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பொலிவியாவில் உள்ள உட்டுருங்கு எரிமலையை இணைக்கும் வகையில் 18,953 அடி உயரத்தில் வாகனப் போக்குரத்துச் சாலை அமைந்திருக்கிறது. எல்லைப் பாதுகாப்பில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை உலக அளவில் தனித்த அடையாளத்தோடு கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்து இருந்தது.

தற்போது அந்தச் சாதனையை முறியடித்து இந்தியாவில் இருக்கும் லடாக் சாலை தனித்துவம் வாய்ந்ததாக மாறியிருக்கிறது. லடாக் பகுதியில் 19,024 அடி உயரத்தில் வாகனப் போக்குவரத்து சாலையை எல்லைப்புற சாலைகள் அமைப்பு சமீபத்தில் நிறுவியிருக்கிறது.

இந்த சாலை கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் பிரிட்டனை சேர்ந்த கின்னஸ் சாதனை அமைப்பினர் கடந்த 4 மாதங்களாக லடாக் சாலையை ஆராய்ந்து தற்போது உலகின் மிக உயர்ந்த வாகனப் போக்குவரத்து சாலை என்ற அடிப்படையில் கின்னஸ் சாதனை சான்றிதழை வழங்கியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz