close
Choose your channels

'வாரிசு' டிரைலர் ரிலீசான ஒரு மணி நேரத்தில் போனிகபூர் தந்த 'துணிவு' அப்டேட்

Wednesday, January 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த 'துணிவு’ திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி அல்லது ஒரு நாள் முன்பாக ஜனவரி 11-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 'துணிவு’ படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

அஜித் நடித்த 'துணிவு’ மற்றும் விஜய் நடித்த 'வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என்று தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரை செய்தியாக இருந்தது.

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக 'துணிவு’ திரைப்படம் ஒரு நாள் முன்பாக அதாவது ஜனவரி 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என செய்திகள் கசிந்த நிலையில் சற்று முன் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் 'துணிவு’ திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் 'வாரிசு’ படத்தின் ரிலீஸ் தேதி இன்று வெளியான டிரெய்லரில் கூட படக்குழுவினர் அறிவிக்காத நிலையில் 'வாரிசு’ படமும் ஜனவரி 11-ம் தேதி வெளியாகுமா? அல்லது திட்டமிட்டபடி ஜனவரி 12ஆம் தேதி வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos