close
Choose your channels
Don
Nenjukku Needhi

இன்ஸ்டாவில் நுழைந்த போனி கபூர்… ஸ்ரீதேவி புகைப்படம் வெளியிட்டு நெகிழ்ச்சி!

Wednesday, January 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல சினிமா தயாரிப்பாளரான போனி கபூர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கணக்கைத் துவங்கியுள்ளார். மேலும் அந்தப் பக்கத்தில் தனது மனைவியும் நடிகையான ஸ்ரீதேவியின் அரிய புகைப்படம் ஒன்றை அவர் பதிவிட்டு உள்ளார். இந்தப் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகை ஸ்ரீதேவி பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி சூப்பர் ஸ்டார் நடிகையாக உயர்ந்தார். அதைத்தொடர்ந்து அவர் பிரபல தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்துகொண்டதும் அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருப்பதும் நமக்குத் தெரிந்ததுதான். இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018 இல் துபாயில் நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இந்த நிகழ்வு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் கலக்கத்தில் ஆழ்த்தியது.

இதையடுத்து சினிமா துறையில் பல வெற்றிப்படங்களை தயாரித்துவரும் போனிகபூர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கான புதிய கணக்கைத் துவங்கியுள்ளார். மேலும் இந்தக் கணக்கில் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட சில பழைய புகைப்படங்களை அவர் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது போனி கபூர் வெளியிட்டு இருக்கும் ஒரு புகைப்படம் பலரது மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

காரணம் கடந்த 2012 ஆம் ஆண்டு லக்னோ பகுதியில் போனிகபூரும் நடிகை ஸ்ரீதேவியும் துர்கா பூஜையில் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வில் நடிகை ஸ்ரீதேவியின் முதுகில் “போனி“ என்று குங்குமத்தால் எழுதப்பட்டு இருக்கிறது. இதைப் பின்னால் இருந்து யாரோ புகைப்படம் எடுத்துள்ளனர். போனிகபூர்- ஸ்ரீதேவி ஜோடியின் காதலை பிரதிபலிக்கும் இந்த அரியப் புகைப்படத்தை தற்போது போனி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் போனி கபூருக்கு ஆறுதல் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்க்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.