close
Choose your channels

இதனால தான் நீங்க தளபதி.. விஜய்யை பாராட்டிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்!

Tuesday, January 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இதனாலதான் நீங்க தளபதி என்றும் கூடிய விரைவில் ஒரு அருமையான விரைவில் சந்திப்போம் என்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் விஜய்க்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவான ’பதான்’ என்ற திரைப்படத்தின் டிரைலர் இன்று காலை வெளியானது. இந்த டிரைலரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட நடிகர் விஜய், ஷாருக்கான் மற்றும் ‘பதான்’ படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த டிரைலர் தற்போது இணையதளங்களில் வைரலாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் ’பதான்’ ட்ரெய்லரை வெளியிட்ட விஜய்க்கு நன்றி தெரிவித்து ஷாருக்கான் டுவிட் செய்துள்ளார்.

தளபதி விஜய் அவர்களுக்கு நன்றி என்றும் அதனாலதான் நீங்க தளபதியாக இருக்கின்றீர்கள் என்றும், கூடிய விரைவில் ஒரு அருமையான விருந்தில் சந்திப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜவான்’ என்ற திரைப்படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த ட்விட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos