close
Choose your channels
Don
Nenjukku Needhi

'சூரரை போற்று' இந்தி ரீமேக்கில் இந்த சூப்பர் நடிகரா?

Saturday, January 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த ‘சூரரை போற்று’ திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ள நிலையில் சூர்யாவின் கேரக்டரில் பிரபல நடிகர் ஒருவரை நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

சூர்யா, அபர்ணா முரளி நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான திரைப்படம் ‘சூரரை போற்று’. இந்த படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் வசூலில் சாதனை செய்திருக்கும் என்றும் கூறப்பட்டது.

பிரபல தொழிலதிபர் ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் மெல்போர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் விருதை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும் தமிழில் இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா ஹிந்தியிலும் இயக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் சூர்யாவின் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.