close
Choose your channels

ஒற்றைக்காலில் நின்று கொண்டு வொர்க்-அவுட் செய்யும் லெஜண்ட் சரவணன் பட நாயகி!

Wednesday, September 15, 2021 • தமிழ் Comments

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் அவர்கள் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படம் தமிழ் தெலுங்கு உள்பட ஐந்து மொழிகளில் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் லெஜண்ட் சரவணன் ஜோடியாக இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டாலா நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் மிக பெரிய அளவில் பிரபலம் என்பதும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இவருக்கு 40 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிக பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒர்க் அவுட் வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அவர் ஒற்றைக்காலில் நின்று கொண்டு ஒர்க்கவுட் செய்வதை அவருடைய ஃபாலோயர்கள் ரசித்து கமெண்ட்ஸ்களை குவித்து வருகின்றனர்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz