close
Choose your channels
Viruman
Laal

ஷாருக்கானின் 'ஜவான்' படத்தில் கேமியோ ரோலில் இந்த நடிகையா?

Wednesday, June 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் விரைவில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பதும் அது மட்டுமின்றி தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் இந்த படத்தில் பணிபுரிந்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே.

அடுத்த ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் கேமியோ ரோலில் பிரபல நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்தான் பாலிவுட்டில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் தீபிகா படுகோனே.

தீபிகா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாகவும், அவரது கேரக்டர் படத்தின் திருப்புமுனையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் ‘ஜவான்’ படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.