மிஸ் செய்துவிட்டேன், அடுத்த முறை மறக்காமல் மெசேஜ் அனுப்புங்க.. அஜித்துக்கு விவேக் ஓபராய் கோரிக்கை ..!


Send us your feedback to audioarticles@vaarta.com


உங்களுடைய கார் ரேஸ் போட்டியை நேரில் பார்க்க முடியாமல் மிஸ் செய்து விட்டேன் என்றும், அடுத்த முறை நீங்கள் தவறாமல் எனக்கு மெசேஜ் அனுப்புங்கள் என்றும் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், நடிகர் அஜித் குறித்து கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சமீபத்தில், நடிகர் அஜித் துபாயில் நடந்த கார் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டார் என்பதும், அவர் மூன்றாவது இடத்தை பிடித்து இந்தியாவுக்கே பெருமை தேடித் தந்தார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி, சமீபத்தில் அவருக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்குவதாக அறிவித்தது.
இந்த நிலையில், அஜீத்துடன் ’விவேகம்’ என்ற படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் சமீபத்தில் அஜித் குறித்து பேசினார். அதில் "அஜித் அண்ணா, எப்படி இருக்கீங்க? எப்போதும் உங்களுக்கு நல்லதே நடக்க வேண்டும். உங்கள் வழியை நானும் பின்பற்றி வருகிறேன்.
கடந்த முறை நீங்கள் கார் ரேஸில் பங்கேற்று போது உங்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போய்விட்டது. அடுத்த முறை எனக்கு மெசேஜ் அனுப்பினால், உங்களுக்காக விசில் அடித்துக் கொண்டாட ஓடி வருவேன்!" என்று அவர் தெரிவித்தார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Vivek Oberai's message to Ajith sir ❤️#VidaaMuyarchi https://t.co/ncUzwx2A27
— Trollywood 𝕏 (@TrollywoodX) February 2, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com