close
Choose your channels
Anbirkiniyaal

தேசிய விருது பெற்ற நடிகரின் நிச்சயதார்த்த தேதி

Wednesday, November 4, 2015 • தமிழ் Comments

பீட்சா, சூது கவ்வும், நேரம் போன்ற படங்களில் நடித்த நடிகர் பாபிசிம்ஹா, 'ஜிகர்தண்டா' படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். ஜிகர்தண்டா வெற்றிக்கு பின்னர் அவர் தற்போது கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பாபிசிம்ஹாவுக்கும் 'உறுமீன்' பட நாயகி ரேஷ்மி மேனனுக்கும் காதல் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளிவந்தது. இந்த செய்தியை இருவருமே மறுத்த நிலையில், தற்போது இந்த செய்தி உண்மையாகியுள்ளது.

பாபிசிம்ஹா-ரேஷ்மி மேனன் திருமண நிச்சயதார்த்தம் வரும் 8ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தற்போது செய்தி வெளிவந்துள்ளது. நடிகை ரேஷ்மி மேனன் ஏற்கனவே மாயா, கிருமி உள்பட பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz