close
Choose your channels
PKK

நடிகர் அவதாரம் எடுத்த பாஜக தலைவர் அண்ணாமலை: சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Friday, May 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு கன்னட திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருப்பதாகவும் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘அரபி’ என்ற கன்னட படத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் அண்ணாமலை நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளதாகவும் இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் ஒரே ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது .

இரண்டு கைகளையும் இழந்த நிலையில் சர்வதேச அளவில் சாதனை படைத்த விசுவாஸ் என்ற நீச்சல் வீரனின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்த கன்னட படம் தயாராகி வருகிறது. விஸ்வாஸின் வாழ்க்கையால் மிகவும் ஈர்க்கப்பட்ட கன்னட இயக்குநர் ராஜ்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். விஜய் ராகவேந்திரா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் அறிவிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.