close
Choose your channels
iruttu
Capmaari

சிங்கப்பெண்களுக்கு 'பிகில்' படக்குழுவினர் வைத்த போட்டி!

Sunday, September 15, 2019 • தமிழ் Comments

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா  வரும் 22ஆம் தேதி வெளீயாகியாகவுள்ளது. இந்த விழா சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகவிருப்பினும், இந்த விழாவை நேரில் கண்டு ரசிக்கவும், தளபதி விஜய்யை நேரில் பார்க்கவும் பெண் ரசிகைகளுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

விஜய்யின் பெண் ரசிகைகள் மட்டும் கலந்து கொள்ளும் இந்த போட்டியில் தளபதி விஜய்யை உங்களுக்கு எதனால் பிடிக்கும்? என்ற கேள்விக்கு பதில் சொல்ல் வேண்டும். சுவாரஸ்யமான பதில் அளிக்கும் பெண்களுக்கு ‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும். இந்த தகவலை இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கவிருக்கும் நடிகை ரம்யா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

இந்த அறிவிப்பை அடுத்து பெண் ரசிகைகள் ஏராளமானோர் இந்த கேள்விக்கு பதில் அளித்து வருகின்றனர். இதில் எத்தனை பெண்களுக்கு ‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கின்றது என்பதைபொறுத்திருந்து பார்ப்போம்

Get Breaking News Alerts From IndiaGlitz