close
Choose your channels

'பிகில்' நடிகையின் அடுத்த படத்தின் பூஜை: இந்துஜா, வர்ஷா பொம்மலா வாழ்த்து!

Tuesday, September 1, 2020 • தமிழ் Comments

தளபதி விஜய், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’பிகில்’ திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனை கேரக்டரில் நடித்தவர்களில் ஒருவர் நடிகை ரெபா மோனிகா. இவருடைய அனிதா என்ற கேரக்டர் இந்த படத்தில் நல்ல விமர்சனத்தைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது நடிகை ரெபா அவர் ஒரு கன்னட திரைப்படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார். ’ரத்தன் பிரபஞ்சா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. கன்னட நடிகர் தனஞ்செயா ஹீரோவாகவும், நடிகை ரெபா மோனிகா ஹீரோயினியாகவும் நடிக்கும் இந்த படத்தை கார்த்திக் கவுடா என்பவர் தயாரிக்கவுள்ளார்.

நடிகை ரெபா இந்த படத்தின் பூஜையில் கலந்து கொண்டு அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து உள்ளார். மேலும் இந்த புகைப்படங்களுக்கு ‘பிகில்’ படத்தில் அவருடன் நடித்த வர்ஷா பொம்மலா, இந்துஜா ஆகியோர் அவருடைய டுவிட்டை ரீடுவிட் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே நடிகை ரெபா மோனிகா தமிழில் ’மழையில் நனைகிறேன்’ மற்றும் ’எஃப்ஐஆர் ’ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz