close
Choose your channels
cred

ரசிகரின் பிறந்த நாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆரி: வைரல் வீடியோ!

Friday, January 22, 2021 • தமிழ் Comments

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரிக்கு நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் ஆதரவும் ரசிகர்களும் பெருகி வருகிறது என்பதும், அதுமட்டுமின்றி அவருக்கு புதிய திரைப்படங்களும் ஒப்பந்தமாகி கொண்டிருக்கின்றன என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் ஆரி இருக்கும்போது அவரை ஏராளமான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்தி பதிவு செய்தனர். அந்த வகையில் தன்னை 105 நாட்களும் வாழ்த்திய தன்னுடைய நெருங்கிய ரசிகர் ஒருவர் பிறந்த நாளில் அவருடைய வீட்டிற்கே சென்று வாழ்த்து தெரிவித்த ஆரியின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 

ஆரியை பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது வெறித்தனமாக ரசித்துக்கொண்டிருந்த ரசிகர் ஒருவரின் பிறந்த நாளில் திடீரென அவரது வீட்டிற்கு ஆரி சென்றார். இதனை எதிர்பாராத அந்த ரசிகரும் அவருடைய மனைவியிடம் இன்ப அதிர்ச்சி அடைந்து அவரை வரவேற்றனர். அதன் பின்னர் ஆரியின் முன்னர் அந்த ரசிகர் பிறந்தநாள் கேக்கை வெட்ட, ஆரி அவருக்கு பிறந்தநாள் கேக் ஊட்டி அவரை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ரசிகர் ஒருவரின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆரிக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz