close
Choose your channels

முன்னணியில் அபிஷேக்: வரிந்து கட்டி வேலை செய்யும் ஆடியன்ஸ்!

Tuesday, November 30, 2021 • தமிழ் Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்றும் இந்த வாரம் மொத்தம் பத்து பேர் நாமினேஷன் செய்யப்பட்டு உள்ளனர் என்பதும் அவர்கள் சிபி, வருண், அபிஷேக், பிரியங்கா, இமான் அண்ணாச்சி, அக்ஷரா, தாமரைச்செல்வி, பாவனி, அபினய் மற்றும் ராஜூ என்பதும் தெரிந்ததே.

கேப்டனான நிரூப் மற்றும் புதிய வரவுகளான சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகிய மூவர் மட்டுமே நாமினேஷன் இருந்து தப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் உள்ளவர்களில் யார் வெளியேற்றப்படுவார் என்பது குறித்து வாக்குகள் சதவிகிதம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி இதுவரை பதிவான வாக்குகளின் அடிப்படையில் அபிஷேக் வெளியேறும் பட்டியலில் முன்னணியில் உள்ளார். அதாவது அபிஷேக் வெறும் 3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று வெளியேறும் பட்டியலில் முதல் நபராக உள்ளதால் அவர் இந்த வாரம் வெளியேற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவரை அடுத்து வருண்,  அபினய், தாமரை ஆகியோர்களும் குறைந்த வாக்குகள் பெற்றுள்ளனர்.

நாமினேஷன் பட்டியலில் உள்ள ராஜூ மிக அதிகமாக 20 சதவீத வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து பிரியங்கா, சிபி, இமான் அண்ணாச்சி, பாவனி மற்றும் அக்சரா ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்ட அபிஷேக் இந்த வாரமும் வெளியேற்றப்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz