close
Choose your channels

இந்த வாரம் வெளியேறும் பிக்பாஸ் போட்டியாளர் யார்? வாக்குகள் விபரம்

Saturday, October 23, 2021 • தமிழ் Comments

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் வாரம் ஒருவர் வெளியேற்றப்படுவார்கள் என்பதும், அதற்கான நாமினேஷன் திங்கட்கிழமை நடைபெறும் என்பதும், குறைந்த வாக்குகளின் அடிப்படையில் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்படுவார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முதல் போட்டியாளராக மலேசியாவை சேர்ந்த நாடியா சாங் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்படுபவர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் பிரியங்கா, பாவனி ரெட்டி, அக்ஷரா, தாமரைச்செல்வி, இசைவாணி, ஐக்கி பெர்ரி, அபினய், சின்ன பொண்ணு மற்றும் அபிஷேக் ராஜா ஆகிய 9 பேர்கள் சிக்கியுள்ள நிலையில் இவர்களில் குறைந்த வாக்குகள் அடிப்படையில் அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, அபினய் மற்றும் இசைவாணி ஆகியோர்களில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிக்பாஸ் நாமினேஷன் சிக்கிய 9 போட்டியாளர்களில் மிக அதிகமாக அக்ஷராவும் அதனை அடுத்து பிரியங்கா, பாவனி ரெட்டி, தாமரை ஆகியோர் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் அதிகாரபூர்வமற்ற இந்த வாக்குகளின் அடிப்படையில் அபிஷேக் இந்த வாரம் வெளியேற்றப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz