close
Choose your channels
Don
Nenjukku Needhi

ஆனந்தக்கண்ணீருடன் வருணை வரவேற்கும் உறவினர்கள்: நெகிழ்ச்சியான வீடியோ

Wednesday, December 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் கடந்த ஞாயிறு அன்று வருண் மற்றும் அக்ஷரா ஆகிய இருவர் வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இனி அடுத்து வரும் வாரங்களிலும் இருவர் வெளியேற்றப் பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட வருணை அவரது குடும்பத்தினர் ஆனந்த கண்ணீருடன் வரவேற்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. வருண் சகோதரர்கள், தாய் தந்தை மற்றும் உறவினர்கள் கட்டிப்பிடித்து அவரை வரவேற்பதும் அதன் பின் வருண் கேக் வெட்டி கொண்டாடுவதுமான காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வருண் நடித்து முடித்துள்ள ’ஜோஷ்வா இமைபோல் காக்க’ என்ற திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படமும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் வீட்டில் கிடைத்த பிரபலம் இந்த படத்தின் வெற்றிக்கும் காரணமாக இருக்கும் என்றும், இந்த படம் வெற்றி பெற்றால் அவருக்கு தமிழ்த் திரையுலகில் ஒரு நிலையான இடம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.