close
Choose your channels
Por
Joshwa

தலைகீழ் மாற்றம்: இந்த வாரம் டாப் மற்றும் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் இவர்களா?

Saturday, March 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ள நிலையில் அதை விட ஆச்சரியமான ஒரு தகவல் இந்த வாரம் வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றவர் ஜூலி என்பது தெரியவந்துள்ளது

பிக்பாஸ் முதல் சீசனில் அனைவராலும் வெறுக்கப்பட்ட ஒரு போட்டியாளராக இருந்த ஜூலி, பிக் பாஸ் அல்டிமேட் சீசனில் ஆரம்பத்திலிருந்தே நன்றாக விளையாடி வருகிறார். குறிப்பாக இந்த வாரத்தில் பாலாஜி அவரை பாராட்டிய நிகழ்வுகளும் நடந்தன. இந்த நிலைக்கு ஜூலி வாக்கெடுப்பில் முதலிடத்திலும் அவரை அடுத்ததாக தாமரை இரண்டாவது இடத்திலும் உள்ளார்

இந்த நிலையில் இந்த வார வாக்கெடுப்பில் கடைசி இடத்தில் சதீஷ் இருப்பதால் அவர் தான் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளன. சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் சதீஷ் ஒரே நாளில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக உள்ளே வந்த நிலையில் அதில் சதீஷ் நாளை வெளியேறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.