ரொம்ப கனமா இருக்குது.. பிக்பாஸ் கோப்பையை கையில் ஏந்திய முத்துகுமரன் வீடியோ..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிக் பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன், டைட்டில் வின்னர் கோப்பையை கையில் ஏந்தி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் அவருக்கு ஒரு இருப்பதாவது:
நன்றி மறப்பது நன்றன்று, இது இந்த காணொளிக்காக, இந்த கணத்திற்காக இல்ல, என் காலத்துக்கும் நான் ஞாபகம் வச்சுக்கணும் நினைக்கிறது. எல்லோரும் சேர்ந்து இதை என் கையில் தூக்கி கொடுத்து இருக்கீங்க. ரொம்ப கனமா இருக்கு, அவ்வளவு அன்பு என நண்பர்களெல்லாம் உள்ளே வரும்போது சொன்னாங்க. வெளியில் உங்களுக்கு பெரிய ரெஸ்பான்ஸ் இருக்கு, அப்படி இப்படி சொன்னாங்க, அப்பல்லாம் ஒன்னும் தெரியல, ஆனா வந்து பார்க்கிறப்ப அவ்வளவு அன்பு எனக்கா? இவ்வளவு அன்பு எனக்கா? என உழைப்புக்கு இவ்வளவு அன்பு கிடைக்குமானு அவ்வளவு வியப்பா இருக்கு. பேசவே முடியல.
எப்படி நன்றி எப்படி சொல்லலாம் என தெரியல, இந்த கோப்பை கிட்ட பேசுங்கன்னு நான் உள்ள வர்றப்ப சொன்னாங்க, அப்ப சொன்ன வார்த்தையை மறுபடி ஒருமுறை ஞாபகப்படுத்தனும்னு நினைக்கிறேன். அதுதான் நான் என் நன்றியை சொல்றதுக்கு சரி என்று நினைக்கிறேன்.
இந்த மக்களின் அன்பும் அங்கீகாரமான கோப்பை மிக நிச்சயமாக என்னுடைய நேர்மையாலும், என்னுடைய உண்மையாலும் நான் நானா இருக்கிறதாலயும் காப்பாத்திக்குவேன். இது என் உழைப்பின் மேல சத்தியம். நெஞ்சம் நிறைந்த நன்றி உங்க எல்லாருக்கும்’ என்று முத்துக்குமரன் கூறியுள்ளார்.
Title winner #Muthukumaran thanking everyone #biggbosstamil #biggbosstamil8
— Imadh (@MSimath) January 20, 2025
pic.twitter.com/lUDkONSnVs
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments