close
Choose your channels
Don

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியின் 'பகவான்': பிரமாண்டமான பாடல் படப்பிடிப்பு

Tuesday, September 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் ஆரி நடித்து வரும் படங்களில் ஒன்று ‘பகவான்’ என்பதும் இந்த படத்திற்காக பிரமாண்டமான பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜூனன் ‘பகவான்’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இயக்குனர் காளிங்கன் இயக்கி வரும் இந்தப் படம் ஒரு திரில்லர் படம் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ஆரி, பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது என்பதும் இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான கேரக்டரில் ஆரி இந்த படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமின்றி இயக்குனர் காளிங்கனின் அபாரமான திரைக்கதை காரணமாக சீட் நுனியில் ரசிகர்களை நிறுத்தி வைக்கும் அளவுக்கு பரபரப்பான திரில்லர் படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்திற்காக கலா மாஸ்டரின் நடன அமைப்பில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த பாடலுக்காக மூன்று நாட்கள் பயிற்சி எடுத்துக்கொண்டு நடிகர் ஆரி நடனமாடியுள்ளார்.

அதே போல் இந்த படத்தில் ஆங்கில நடிகர் ஜேம்ஸ் பாரட் வில்லனாக நடித்து உள்ளார் என்பதும் நாயகன், வில்லன் ஆகியோருக்கு இடையே நடக்கும் ஆக்ஷன் காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த படத்தை வரும் தீபாவளி அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தில் ஆரி ஜோடியாக ‘ரங்கஸ்தலம்’ படத்தின் நாயகி பூஜிதா பொன்னாடா நடிக்கிறார். இவர்களுடன் ஜெகன், முருகதாஸ், யோக் ஜேபி, சம்பத் ராம், லக்கி நாராயணன், அலெக்ஸ், அபிஷேக், சத்யா, “மாஸ்டர்” பாண்டி, அஜய் தத்தா ஆகியோர் முக்கியபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் ’கோப்ரா’ படத்தில் நடிக்கும் ஆங்கில நடிகர் ஜேம்ஸ் பாரட் வில்னாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசன் பாலா இசையில் முருகன் சரவணன் ஒளிப்பதிவில் அதுல் விஜய் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை அம்மன்யா மூவீஸ் சார்பில் சிவி மஞ்சுநாதா அவர்கள் தயாரித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.