close
Choose your channels
Don
Nenjukku Needhi

பிக்பாஸில் இருந்து வெளியேறிய தாமரைக்கு அடுத்த வாய்ப்பு: இந்த முறை டைட்டில் நிச்சயம்!

Tuesday, January 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 95 நாட்களுக்கு மேலாக சிறப்பாக விளையாடிய தாமரை கடந்த ஞாயிறன்று எவிக்சன் செய்யப்பட்டார் என்பதும் அவரது வெளியேற்றும் பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு பெரும் அதிருப்தியை அளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கமல்ஹாசனே தாமரையுடன் பேசியபோது மறைமுகமாக தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார் என்பதும் ஆனால் அதே நேரத்தில் தாமரைக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக அவர் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரைக்கு உடனடியாக அடுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. குக் வித் கோமாளி சீசன் 3 விரைவில் ஆரம்பிக்க உள்ள நிலையில் அந்த நிகழ்ச்சியில் தாமரை ஒரு போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தாமரை ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரும் பாராட்டும் வகையில் சமையல் செய்திருந்தார் என்பதும், அவரது சமையலை பிரியங்காவே பாராட்டியிருந்தார் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் தனது சமையல் திறமையால் ‘குக் வித் கோமாளில்’ நிகழ்ச்சியில் தாமரை சிறப்பாக விளையாடி டைட்டில் பட்டத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.